vegetables kurma recipe white kirma recipe : தோசை, இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா
Advertisment
தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை - 2 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)
Advertisment
Advertisements
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
தனியா - 1 டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
பூண்டு - 1 சின்ன பல்
தாளிக்க:
பட்டை, லவங்கம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு போட்டு பிறகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நல்லா நைசா அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்த பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடவும். பிறகு சிறிதளவு தயிர் சேர்க்கவும். சுவையான வெள்ளை குருமா தயார்.
இவை பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.