வெஜிடபுள் புட்டு ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருள்கள் :
சிறிய கேரட் - 1
பீன்ஸ் - 4
பச்சை பட்டாணி - 25 கிராம்
காலிஃபிளவர் - 1/4 கப்
உருளைக்கிழங்கு சிறியது - 1
கடலை எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 கப் (100 கிராம்)
செய்முறை:
தேவையான காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பிறகு, உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கலந்துவிடவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்கறிகள் ஓரளவிற்கு வெந்ததும் தீயை அணைத்து, அதனோடு அரிசி மாவு, உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, உதிரியாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு தயாரான காய்கறி-அரிசி மாவு கலவையை இட்லி குக்கர் அல்லது புட்டு மேக்கரில் 10 நிமிடங்களுக்கு வேகவையுங்கள். சத்தான காய்கறி புட்டு தயார். இதனோடு தேங்காய் சட்னி வைத்துச் சாப்பிடலாம்.