vegtable biryani recipe hotel veg biryani : எளிமையான முறையில் வீட்டில் காய்கறி பிரியாணி (வெஜ் பிரியாணி)
Advertisment
முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித்த பட்டை, கிராம்பு போட்டு பிறகு தேங்காய் பால் சேர்த்து 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
Advertisment
Advertisements
அதன் பின்னர் அரிசியை கழுவி அதில் போடவும். தீயை சிம்மில் வைத்து எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி தயார்.