Advertisment

மணப்பெண் புடவை ரூ. 8 லட்சம்... தங்கத்தில் மாலை! வைரலாகும் வேல ராமமூர்த்தி வீட்டு திருமணம்

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vela ramamoorthy

பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் வீட்டு திருமணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, மணமக்கள் தங்கத்தில் மாலை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இலக்கிய வட்டாரத்தில் பிரபலமாக இருந்தவர் வேல ராமமூர்த்தி. இவர், கிடாரி, கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையிலும் இவர் கால் பதித்தார்.

 

Wedding

 

இந்நிலையில், வேல ராமமூர்த்தியுடைய பேத்தியின் திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்திருமணம் பலரும் ஆச்சரியப்படும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்கள் மலர்களால் ஆன மாலைகளை அணிந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இந்த திருமணத்தில் மணமகன் மற்று மணமகள் ஆகியோர் தங்கத்தால் செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்ததாக தெரிகிறது.

 

wedding 3

 

இதேபோல், திருமணத்திற்காக மணமகள் அணிந்திருந்த உடைகள் மட்டும் ரூ. 10 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. அதன்படி, மணமகளின் புடவை ரூ. 8 லட்சம் எனவும், அவர் அணிந்திருந்த பிளவுஸ் ரூ. 3 லட்சம் எனவும் கூறப்படுகிறது. மணமகளுக்கு சீராக 300 சவரன் நகைகள் வழங்கப்பட்டதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

Wedding

 

மேலும், திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலங்களின் கச்சேரியும் இடம்பெற்றுள்ளது. இத்திருமணத்திற்காக நெல்லை ட்ரேட் சென்டரில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மண்டபம் போன்று செட் அமைத்துள்ளனர். இதில் மணமகன் வீட்டார் நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ். முருகன் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Celebrities Wedding
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment