/tamil-ie/media/media_files/uploads/2021/01/ven-pongal-recipe.jpg)
Ven pongal recipe with vegetables, ven pongal making tamil video: வெண் பொங்கல் எப்போதுமே விரும்புகிற உணவுதான் என்றாலும், தைப் பொங்கல் அன்று இது ஸ்பெஷல்! இதை காய்கறிகளுடன் கலந்து தயாரித்தால், வெஜிடபிள் வெண் பொங்கலாக மணக்கும். சைட் டிஷ் இல்லாமலேயே இதைச் சாப்பிடலாம்.
Ven Pongal Making Tamil Video: வெஜிடபிள் வெண் பொங்கல்
வெஜிடபிள் வெண் பொங்கள் செய்யத் தேவையான பொருட்கள் : பச்சரிசி – அரை கப், பாசிப் பருப்பு – கால் கப், வெங்காயம் – 1, பிடித்தமான காய்கறிகள் – 1 கப், பச்சை பட்டாணி – அரை கப், இஞ்சி – 1 துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள், நெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கு, மிளகு, சீரகம் – சிறிதளவு, ஏலக்காய், பட்டை – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கு
வெஜிடபிள் வெண் பொங்கல் செய்முறை : முதலில் வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ள வேண்டும். பச்சை பட்டாணியை வேக வைத்துக்கொள்ளலாம்.
அரிசி, பாசிப் பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறி இறக்குங்கள். இப்போது சுவையான வெஜிடபிள் வெண் பொங்கல் ரெடி.
இதில் இன்னொரு வசதி, காய்கறிகள் சேர்ந்திருப்பதால் தனியாக சட்னி, சாம்பார் அவசியம் இல்லை. எனினும் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையை உணரலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.