How to prepare Ven Pongal: வெண் பொங்கல், உணவு மட்டுமா... மருந்து! ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவில் ஊட்டம் அளித்து, எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயறையும்
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
பயன்படுத்தலாம்.
தமிழகத்தை விஞ்சும் வெளிநாட்டு பொங்கல் - மண் பாசத்துல நம்மள மிஞ்சிடுவாங்களோ!!
வெண் பொங்கலில் மிளகு சேர்க்கும்போது கவனிக்க..! தூளாக்கி விற்கப்படும் மிளகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் பொடித்து வைக்கப்பட்ட மிளகும், நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட மிளகும், தன்னுள் உள்ள மருத்துவ ஆல்கலாய்டுகளையும் நறுமணச் சத்துகளையும் இழக்க ஆரம்பித்துவிடும். குறுமிளகை அவ்வப்போது தூளாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளியை நீக்க, இரைப்பு நோயில் மூச்சிரைப்பைக் குறைக்க, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க... எனப் பல வகைகளில் உதவிடும்.
வெண் பொங்கல் தயார் செய்வது எப்படி?
பொன்னி அரிசி – கால்கிலோ
பாசிப்பருப்பு பருப்பு – 100 கிராம்
இஞ்சி, பூண்டு நறுக்கியது – 2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 10
உப்பு – தேவைக்கேற்ப
வெண்பொங்கல் செய்முறை
அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை குழைய வேகவிடவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டவும். நன்றாக கிளறினால் சுவையான பொங்கல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.