வெண்டைக்காய் வைத்து சூப்பர் 65 ரெசிபி, இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கால் கிலோ வெண்டைக்காய் நறுக்கியது
1 டேபிள் ஸ்பூன் மைதா
1 ஸ்பூன் கான்பிளவர் மாவு
2 ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் சீரகப் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான உப்பு
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: வெண்டைக்காய்யை பெரிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதா, கான்பிளவர், அரிசி மாவு, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது சேத்து கிளரவும். தொடர்ந்து வெண்டைக்காய் சேர்த்து கிளரவும். தண்ணீர் சேர்த்து கிளரவும். இதை மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.