இப்படி ஒரு முறை வெண்டைக்காய் பொறியல் செய்து பாருங்க. சுவை சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்- 2 கப்
தேங்காய் துருவல்- அரை கப்
சின்ன வெங்காயம்- 13
சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கடலை எண்ணெய்
செய்முறை: உங்களுக்கு விருப்பமான அளவில் வெண்டைக்காய்யை நன்றாக கழுவி நறுக்கி கொள்ளுங்கள். சுத்தமாக ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு தொடர்ந்து வெட்டிய வெண்டைக்காய்யை வதக்கவும். தொடர்ந்து துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வெண்டைக்காயுடன், சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அரைத்ததை சேர்த்து வதக்கவும். கடைசியில் உப்பு போட்டு கிளரவேண்டும். 15 நிமிடங்கள் வரை மூடி வைத்து, தொடர்ந்து வதக்கவும். சுவையான வெண்டைக்காய் பொறியல் ரெடி.