சுவையான வெந்தய ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். வெந்தயம் பொதுவாகவே வயிறு வலி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சாப்பிடுவோம். இந்த வெந்தய ஊறுகாய் தாய்மை அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தாய்மை அடைந்த பெண்களுக்கு அவ்வப்போது வாந்தி, வாய் கசப்பு தன்மை ஏற்படும். அப்போது இந்த ஊறுகாய் சாப்பிட உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
முளைவிட்ட வெந்தயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 6 (நறுக்கியது)
எலுமிச்சம் பழம் – 1
கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – ½ டீஸ்பூன்
தாளிக்க தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
பெருங்காயப் தூள்– ½ டீஸ்பூன்
செய்முறை
முதலில் வெந்தயத்தை தண்ணீர் தெளித்து முளைகட்டி வடித்து பின் ஈரம் போக காய வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து கல் உப்பு வறுத்து பொடிக்கவும். இப்போது அதே கடாயை சுத்தம் செய்து வெந்தயம், நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து மஞ்சள் தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறவும். அடுத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களை தாளித்து இதில் நன்கு கலந்து விடவும். அவ்வளவு தான் ஆரோக்கியமான வெந்தய ஊறுகாய் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“