வெண்டைக்காய் புளி குழம்பு.. டேஸ்டில் அடிச்சிக்க முடியாது!

வெண்டைக்காய் குழம்பு செய்யும் முறை இங்கே

vendakkai puli kozhambu recipe vendakkai recipes
vendakkai puli kozhambu recipe vendakkai recipes

Vendakkai Puli Kozhambu recipe Vendakkai recipes : புளி குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது . அதுலையும் வெண்டைக்காய் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல இருக்கும்.

எளிய வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் குழம்பு செய்யும் முறை இங்கே

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, அதில் பாதியை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயை அரைத்து பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தோல் உரித்து நறுக்காமல் வைத்துள்ள பாதி வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். இதனுடன் பூண்டு, தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் மல்லித்தூள், மிளகாய் தூள் போட்டு லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, பின்னர் விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு சிவக்க வதக்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கவும். அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும். பின்னர் அதில் புளி கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். குழம்பு சுண்டி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

Web Title: Vendakkai puli kozhambu recipe vendakkai recipes tamilvendakkai puli kozhambu video tamil

Next Story
பாதாம் பால்: வீட்டிலேயே சூப்பரா செய்யலாம்!almond milk recipe news tamil news how to make almond milk at home
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express