இப்படி பொடி செய்து, அதை சேர்த்து வெந்தயக் குழம்பு வைத்தால், சுவை அள்ளும். அதுமட்டும் இல்லை 3 நாட்கள் வரை கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் அரிசி
அரை ஸ்பூன்ன் வெந்தயம்
அரை ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் மிளகு
100 எம்.எல் நல்ல எண்ணெய்
கடுகு
1 ஸ்பூன் வெந்தயம்
சின்ன வெங்காயம் 30
6 பல் பூண்டு இடித்தது
கருவேப்பிலை
தக்காளி 3
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் அரை ஸ்பூன்
¼ மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மிளகாய் துள்
1 ½ மல்லித் தூள்
நெல்லிக்காய் அளவு புளி
வெந்தயக் குழம்பு பொடி 1 ½ ஸ்பூன் பொடி
செய்முறை: முதலில் நாம் வெந்தயக் குழம்பு பொடியை ரெடி செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசி, சீரகம், மிளகு, வெந்தயம் வறுக்க வேண்டும். இது ஆறியதும் பொடி செய்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்துகொள்ளவும். அதில் கடுகு சேர்க்கவும். தொடர்ந்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு இடித்தது, தக்களியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளாய் தூள் சேர்த்து வதக்கவும். இந்நிலையில் இதில் புளி கரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதில் வெந்தயக் குழும்பு பொடியை சேர்த்துகொள்ளுங்கள். தொடர்ந்து குழம்பு வத்தும் வரை கிளர வேண்டும். இப்படி செய்தால் 3 நாட்கள் வரை கெட்டுப்போகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“