அசத்தலான வெந்தய இட்லி, ஒரு முறை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 3 கப்
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
ஆமணக்கு விதை – 5
உப்பு
செய்முறை : அரிசியையும் வெந்தயத்தையும் தனித் தனியாக ஊறவையுங்கள். கிட்டதட்ட 2 மணி நேரம் ஊற வேண்டும். தொடர்ந்து அரிசியை அரைக்கும்போது, ஆமணக்கு விதைகளை தோலை நீக்கி சேர்த்து அரையுங்கள். மேலும் வெந்தயத்தை தனியாக அரைத்து வைத்துகொள்ளுங்கள். இந்த இரண்டையும் சேர்த்து கிட்டதட்ட 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சுவையான வெந்தய இட்லி ரெடி