vendhaya Kuzhambu Recipe Vendhaya Kuzhambu in tamil l : கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டிலே சமைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
Advertisment
நாம் தினமும் விதவிதமான குழம்புகளை செய்து சாப்பிடுவதுண்டு. எளிமையான முறையில் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள் .உடலுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
வெந்தயம் - 1,1/2 டீஸ்பூன்
நல்ல எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பூண்டு - 10 பற்கள்
தக்காளி (சின்னது) - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1டீஸ்பூன்
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1/2 டீஸ்பூன்
சீரக பொடி - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
செய்முறை:
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து பொறிந்ததும் கடுகு சேர்த்து தாளித்து, உரித்த வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கும்பொழுது சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும்.பின்னர் பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.
அதனுடன் வத்தல் பொடி, குழம்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, புளி கரைசல் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள், 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.. மனமான வெந்தய குழம்பு ரெடி..!