Vengaya chutney recipe, vengaya chutney video: தினமும் டிபனுக்கு என்ன சட்னி செய்வது என்று புலம்பும் தாய்மார்களுக்கு… மிக எளிதாகவும், சுவையாகவும் சமைத்திடலாம் வெங்காய சட்னி.
காலையில் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் சிம்பிளாக ஒரு சட்னி செய்ய நினைத்தால், வெங்காய சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சட்னி. மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைக்கேற்ப
தக்காளி – 4
வெங்காயம் – 5
புண்டு – 4 பல்
இஞ்சி – சிறு துண்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் பூண்டு, இஞ்சி துண்டை பெரிதாக வெட்டி அதையும் வாணலியில் வதக்கிக் கொள்ளவும்.
மிக்சி ஜாரில் வதக்கியப் பொருட்களைப் போட்டு அதில் தேவையான அளவு உப்பு, சிறிது புளி போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் அரைத்த விழுதை போட்டு கிளறி இறக்கவும். சுவையான வெங்காய சட்னி தயார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Vengaya chutney recipe vengaya chutney recipe in tamil chutney recipes vengaya chutney video
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!