வெங்கடேஷ் பட் செய்த உளுந்து துவயல் நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணை 3 ஸ்பூன்
1 ஸ்பூன் சீரகம்
3 ஸ்பூன் தனியா
முழு உளுந்து 5 ஸ்பூன் அல்லது 75 கிராம்
10 காய்ந்த மிளகாய்
1 கொத்து கருவேப்பிலை
1 கை நிறைய அலல்து 50 கிராம் பூண்டு
தக்காளி 2
எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் பெருங்காயத்துள்
1 ஸ்பூன் வெல்லம்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை சேர்க்கவும் தொடர்ந்து சீரகம், தனியாக, உளுந்து சேர்த்து 4 நிமிடங்கள் வறுக்க வேண்டும். உளுந்தின் நிறம் பொன்னிறமாக மாற வேண்டும். தொடர்ந்து வறுத்த பொருட்களை தனியாக எடுக்கவும். அதே பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் சேர்த்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பூண்டு, தக்காளி நறுக்கியதை சேர்த்து கிளரவும். நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து புளி, பெருங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வறுத்த பொருட்களை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை பேஸ்டாக சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து இந்த துவயலில், எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து தாளித்து சேர்த்து கிளரவும்.