வெங்டேஷ் பட் செய்த, திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளு பொடி. நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் எண்ணெய்
10 பூண்டு
1 கொத்து கருவேப்பிலை
5 வத்தல்
சின்ன அளவு புளி
1 கப் கருப்பு உளுந்து
1 கப் கருப்பு எள்ளு
கொஞ்சம் பெருங்காயம்
உப்பு
கால் டீஸ்பூன் வெல்லம்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து வத்தல் சேர்த்து வறுக்கவும். புளி சேர்த்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து கருப்பு உளுந்தை தனியாக வறுக்க வேண்டும். தொடர்ந்து எள்ளை தனியாக வறுக்க வேண்டும். தற்போது இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அத்துடன் பெருங்காயம், உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்துகொள்ளவும்.