இப்படி கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் பொடி கறி செய்து பாருங்க. வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்யுங்க.
தேவையான் பொருட்கள்
6 ஸ்பூன் கடலை எண்ணெய்
அரை கிலோ கத்திரிக்காய்
15 வத்தல்
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் தனியா
2 ஸ்பூன் பச்சை வேர்கடலை
அரை ஸ்பூன் எள்ளு
1 ஸ்பூன் கடுகு
1 கொத்து கருவேப்பிலை
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
2 ஸ்பூன் கட்டியான புளி தண்ணீர்
கால் கப் தண்ணீர்
அரை ஸ்பூன் பெருங்காயத்தூள்
2 ஸ்பூன் நல்லெண்ணை
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து வத்தல், கடலை பருப்பு, தனியா, வேர்கடலை சேர்த்து கிளரவும். பாதி வதங்கியதும் எள்ளு சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் மீண்டும் 3 ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து அதில் கருவேப்பிலை, கடுகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் புளி தண்ணீர் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கொண்டு கிளரவும். தண்ணீர் சேர்த்து வேகும் வரை காத்திருக்கும். தற்போது அரைத்த மசாலாவை சேர்த்து கிளரவும். கடைசியாக நல்லெண்ணை சேர்த்து கிளரவும்.