ஒரு முறை வெங்கடேஷ் பட் செய்வது போல் நீங்களும் மணத்தக்காளி ரசம் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் மிளகு
1 ½ ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் கடுகு
2 ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
கால் ஸ்பூன் வெந்தயம்
4 வத்தல்
1 தக்காளி நறுக்கியது
1 கப் மணத்தக்காளி கீரை நறுக்கியது
அரிசி கழுவிய நீர் 2 கப்
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
1 கப் தேங்காய் பால்
பெருங்காயத் தூள்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் சீரகம், கடுகு, மிளகு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை அரைத்து வைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், வத்தல், தக்காளி சேர்த்து வதக்கவும். மணத்தக்காளி கீரையை நன்றாக கழுவி நறுக்கி, இதில் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து இதில் அரிசி கழுவிய நீரை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த ரசப் பொடியை சேர்த்து கிளரவும். மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் பால் சேர்த்து கிளரவும். உடனே அடுப்பை அணைக்கவும்.