ஒரு முறை வெங்கடேஷ் பட் செய்த மாம்பழ பாயாசத்தை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
7 மாம்பழம்
2 கப் முதல் தேங்காய் பால்
250 கிராம் வெல்லம்
ஒரு சிட்டிகை உப்பு
அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்
2 கப் இரண்டாம் கட்ட தேங்காய் பால்
கொஞ்சம் குங்குமம் பூ
செய்முறை : ஒரு பாத்திரத்தில் மாமபழத்தை எடுத்துகொண்டு கையால் நன்றாக மசித்துவிடவும். இதில் முதல் தேங்காய் பாலை செர்த்து கிளவும். தொடர்ந்து இரண்டாம் கட்ட தேங்காய் பாலில், வெல்லத்தை கரைக்க வேண்டும். தொடர்ந்து அதை வடிகட்டி, இதில் சேர்க்கவும். தொடர்ந்து இதில் ஏலாக்காய் பொடி, குங்குமப்பூ, உப்பு சேர்ந்து கலக்கவும். தொடர்ந்து இதற்கு மேலாக மாம்பழத்தின் துண்டுகளை சேர்க்கவும்.