வெங்கடேஷ் பட், 35 வருடங்களுக்கு முன்பு தனக்கு மிளகாய் தொக்கு எப்படி செய்ய வேண்டும் என்பதை ராஜ ரத்தினம் என்பவர் சொல்லி கொடுத்ததாக கூறி உள்ளார். இது மிகவும் ஸ்பெஷலான மற்றும் தனக்கு பிடித்த ரெசிபி என்றும் தெரிவித்துள்ளார். இதை நீங்களும் செய்யலாம்
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் 150 கிராம் மிளகாய்
3 ஸ்பூன் கடலை எண்ணெய்
விதை இல்லாத குண்டு வத்தல் 10
தண்ணீர்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் பெருங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
கல் உப்பு தேவையான அளவு
25 கிராம் புளி
வெல்லம் 1 ஸ்பூன்
நல்லெண்ணை 2 ஸ்பூன்
செய்முறை: பச்சை மிளகாய்யை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் நறுக்கியத்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து காய்ந்த குண்டு வத்தலை விதைகள் நீக்கி அதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வதங்கிய மிளகாய்யை, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். மிளகாய் வதக்கிய அதே பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் சேர்த்து, கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கிளரவும். அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து, அதையும் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு, புளி தண்ணீர், வெல்லம் சேர்த்து கிளரவும். இதன் நிறம் மாறும் வரை கிளர வேண்டும். தொடர்ந்து எண்ணெய் வெளியேறும் வரை கிளரவும். அடுப்பை அணைப்பதற்கு முன்பாக நல்லெண்ணை சேர்த்து கிளரவும்.