வெங்கடேஷ் பட் கொடுத்த பேட்டி ஒன்றில், அவரது அம்மா செய்து தரும் இந்த தால் தோவா ரெசிபி பற்றி பேசி உள்ளார். நீங்களும் இதை வீட்டில் செய்து பாருக்கலாம்
தேவையான பொருட்கள்
2 கப் பாசி பருப்பு
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
அரை ஸ்பூன் இஞ்சி
8 பச்சை மிளகாய் நறுக்கியது
அரை ஸ்பூன் காயப் பொடி
2 தக்காளி
1 ஸ்பூன் கடுகு
உப்பு
3 தேங்காய் எண்ணெய்
செய்முறை: குக்கரில் பாசி பருப்பை சேர்த்து, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், கடுகு சேர்த்து, பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கியது சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தக்காளியை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். காயப் பொடி சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். வேக வைத்த பருப்பை இதில் சேர்க்கவும். கொதிக்க வைக்கவும்.