ஒரு முறை இப்படி வெங்கடேஷ் பட் செய்வது போல் பீர்க்கங்காய் சட்னி, செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடலை பருப்பு
1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
8 வத்தல்
அரை மூடி தேங்காய் துருவல்
50 கிராம் புளி
கொஞ்சம் வெல்லம்
உப்பு
பீர்க்கங்காய் 2
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் வத்தல் சேர்த்து வதக்கவும். அரை மூடி தேங்காய் துருவலை சேர்த்து கிளரவும். அதில் பீர்க்கங்காய் நறுக்கியதை சேர்த்து கிளரவும். புளியை கரைத்து அதில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். இதை அரைத்துகொண்டால் சுவையான சட்னி ரெடி.