வெங்கடேஷ் பட்டின் ரொம்ப ஸ்பெஷலான ரெசிபி, இந்த நெய் மணக்கும் வெண்டைக்காய் சாதத்தை நீங்களும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் எண்ணெய்
அரை கிலோ வெண்டைக்காய்
1 ஸ்பூன் கடலை பருப்பு
1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
20 பூண்டு
அரை ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் மிளகு
ஒரு கொத்து கருவேப்பிலை
5 வத்தல்
அரை மூடி துருவிய தேங்காய்
2 ஸ்பூன் நல்லெண்ணை
அரை ஸ்பூன் கடுகு
2 ஸ்பூன் வேர்கடலை
2 ஸ்பூன் முந்திரி பருப்பு
பச்சை மிளகாய் 4 வெட்டியது
1 கொத்து கருவேப்பிலை
அரை ஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
வேக வைத்த சாதம் 2 கப்
நெய்
உப்பு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெண்டைக்காய்யை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்து, அதில் உப்பை தூவ வேண்டும். தொடர்ந்து அதே பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, உளுந்து, வத்தல், பூண்டு, சீரகம் , மிளகு , கருவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இதை நாம் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, வேர்கடலை, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதில் அரைத்த பொடியை சேர்க்கவும். தொடர்ந்து வெண்டைக்காய் சேர்க்கவும். தொடர்ந்து அவித்த சாதத்தை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளர வேண்டும். கடைசியில் நெய் ஊற்றி பரிமாறவும்.