ஒரு முறை வெங்கடேஷ் பட் செய்வது போல் சேப்பங்கிழங்கு வறுவல் நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு கால் கிலோ
2 ஸ்பூன் கடலை எண்ணெய்
2 காய்ந்த மிளகாய்
1 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு
ஒரு கொத்து கருவேப்பிலை
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் பெருங்காயத் தூள்
அரை ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் நெய்
செய்முறை : சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி, அதை குக்கரில் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு எடுக்கவும். அதன் தோலை நீக்கி வட்டமாக தடிமனாக வெட்டவும். அரை இஞ்ச் அளவு தடிமனாக வெட்ட வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வத்தல் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்க்கவும். தொடர்ந்து கிழங்கின் வழவழப்பு தன்மை செல்லும் வரை வதக்கவும். தொடர்ந்து இதில் மஞ்சள் பொடி, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரவும். 12 நிமிடங்கள் வறுபட வேண்டும். தொடர்ந்து அரிசி மாவு, நெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கிழங்கின் இரண்டு பக்கமும், நன்றாக ரோஸ்ட் ஆக 14 நிமிடங்கள் தேவைப்படும். கடைசியாக ஒரு கொத்து கருவேப்பிலை மீண்டும் சேர்த்து கிளரவும்.