வெங்கடேஷ் பட் செய்வது போல் சின்ன வெங்காயத் தொக்கு செய்யுங்க. இது எல்லா உணவுக்கு செம்ம காம்பினேஷனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
400 கிராம் சின்ன வெங்காயம்
நல்லெண்னை 4 ஸ்பூன்
அரை ஸ்பூன் வெந்தயம்
12 வத்தல்
1 ஸ்பூன் புளி தண்ணீர்
அரை ஸ்பூன் வெல்லம்
1 ஸ்பூன் காஷ்மீரி வத்தல் பொடி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வெந்தயம், 6 வத்தல் சேர்த்து கிளரவும். சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். கிட்டதட்ட 10 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். வதக்கியதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து வதக்கிய பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கிளரவும், தற்போது அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். புளி தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து வெல்லம் சேர்க்க்கவும். தொடர்ந்து வத்தல் பொடி சேர்த்து கொதுக்க வைக்கவும். எண்ணெய் வெளியேறும் வரை காத்திருக்கவும்.