கத்திரிக்காய் வைத்து தீயல் செய்து பாருங்க சூப்பரா இருக்கும். இப்படி வெங்கடேஷ் பட் செய்வது போல் ரெசிபி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய்- 3
தக்காளி-2
பூண்டு
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
பெருங்காயம்
உப்பு
செய்முறை: முதலில் பெரிய கத்திரிக்காய்யை நெருப்பில் நேரடியாக சுட வேண்டும். தற்போது அதன் தோலை நீக்கி, அதை மசித்துக்கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு போட்டு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி மற்றும் பூண்டு போட்டு வதக்கவும். நிறம் மாறியதும் மசித்த கத்திரிக்காய் சேர்த்து அத்துடன் , மஞ்சள் பொடி, மிளாகாய் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.