ஒரு முறை வெங்கடேஷ் பட் செய்வது போல் ஆந்திர கத்திரிக்காய் மசாலா செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் வேர்கடலை
2 ஸ்பூன் வெள்ளை எள்ளு
5 ஸ்பூன் கடலை எண்ணெய்
10 நீளமான கத்திரிக்காய்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்
5 வத்தல்
அரை ஸ்பூன் ஓமம்
2 வெங்காயம்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
3 தக்காளி அரைத்தது
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
முக்கால் ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் மல்லித்தூள்
அரை ஸ்பூன் பெருங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
4 பச்சை மிளகாய்
அரை டம்ளர் தண்ணீர்
1 கட்டு வெந்தயக் கீரை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் வேர்கடலை, வெள்ளை எள்ளு சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இதன் சூடு ஆறியதும், அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பத்திரத்திக்ல் கடலை எண்ணெய் சேர்த்து கத்திரிக்காய் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும். மீண்டும் இதில் கடுகு, சீரகம், வத்தல், ஓமம், வெங்காயாம் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி அரைத்தது, சேர்த்து கிளரவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கருவேப்பிலை, உப்பு, பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கிளரவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் நன்றாக வதங்க வேண்டும். தொடர்ந்து வெல்லம் சேர்த்து கிளரவும்.தொடர்ந்து வெந்தயக் கீரை சேர்த்து கிளரவும். கீரை 8 நிமிடங்கள் வேக வேண்டும். வதக்கி வைத்திருந்த கத்திரிக்காய் சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த வேர்கடலை- எள்ளு பொடி சேர்த்து கிளரவும்.