மணத்தக்காளி கீரை வைத்து சூப்பர் ரெசிபி. ஒரு ரெசிபி செய்தால் போது, 3 வழியில் நாம் அதை சாப்பிட முடியும்.
தேவையான பொருட்கள்
1 கட்டு மணத்தக்காளி கீரை
8 பூண்டு
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் சீரகம்
1 கொத்து கருவேப்பிலை
3 பச்சை மிளகாய்
அரை கப் தேங்காய் துருவல்
கால் ஸ்பூன் பெருங்காயம்
உப்பு
200 எம். எல் தயிர்
செய்முறை : மணத்தக்காளி கீரையை நாம் சுத்தம் செய்து கழுவ வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சீரகம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். 8 நிமிங்கள் வதக்க வேண்டும். பச்சை மிளகாய்யை சேர்த்து கிளரவும். இத்துடன் தேங்காய் துருவியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். இந்நிலையில் இதில் தேங்காய் எண்ணெய், சீரகம், கருவேப்பிலை, வத்தல் சேர்த்து தாளித்து கொட்டவும். இப்படியே இதை நாம் சட்னியாகவும் சாப்பிடலாம். இதுபோல இதை 4 ஸ்பூன் பாத்திரத்தில் சேர்த்து கொண்டு, தயிர் சேர்த்து கலந்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். மேலும் இத்துடன் தண்ணீர் சேர்த்து நாம் குடிக்கவும் செய்யலாம்.