இந்த முறையில் நீங்கள் காளிபிளவர் செய்தால், எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம். வெங்கடேஷ் பட் சொல்வது போல் செய்து பார்க்கவும்.
தேவையான பொருட்கள்
3 பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
1 துண்டு இஞ்சி
1 கை பிடி பூண்டு
கால் கப் தண்ணீர்
காளிபிளவர் 1 பூ
4 ஸ்பூன் கடலை எண்ணெய்
3 தக்காளி நறுக்கியது
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் கரம் மசாலா ]
அரை கப் தயிர்
செய்முறை: வெங்காயத்தை நறுக்க வேண்டும். மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தக்காளியை சேர்த்து கிளரவும். தக்காளி வெந்ததும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வேக வக்கவும். . காளிபிளவர் தண்ணீரில் வேக வைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து தயிரை நன்றாக கலந்து அதை சேர்க்கவும். தொடர்ந்து கொத்தமல்லி இலை சேர்த்து கிளரவும்.