குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கிரேஸ் செய்த வெண்டைக்காய் துவயலை வெங்கடேஷ் பட் வியந்து பாராட்டினார். இதை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கால் கிலோ வெண்டைக்காய்
1½ ஸ்பூன் கடலை பருப்பு
1 ½ ஸ்பூன் உளுந்தம் பருப்பு
5 சின்ன வெங்காயம்
1 பெரிய வெங்காயம்
3 வத்தல்
சிறிய அளவு புளி
எண்ணெய் 4 ஸ்பூன்
உப்பு
1 கொத்து கருவேப்பிலை
தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வத்தல், புளி சேர்த்து கிளரவும். இதனை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து கிளரவும். மிக்ஸியில் முதலில் வத்தல், புளி, வெங்காயம் கலவையை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து வதக்கிய வெண்டைக்காய்யை சேர்த்து, துருவிய தேங்காய, உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.