ஒரு முறை வெங்கடேஷ் பட் செய்வது போல் குதிரைவாலி அரிசியில் தேங்காய் பால் கஞ்சி செய்து பார்க்கவும்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி – 1 கப்
2 கப் தண்ணீர்
2 கப் தேங்காய் பால்
உப்பு
எண்ணெய்
4 ஸ்பூன் வெங்காயம் நறுக்கியது
செய்முறை: குதிரைவாலி அரிசியை இரவில் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை குக்கரில் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து இதில் தேங்காய் பால் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வறுக்க வேண்டும். இதை கஞ்சியின் மீது சேர்த்து சாப்பிடலாம்.