சுவை, ஆரோக்கியம் நிறைந்த வெந்தய முப்பருப்பு குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முழு வெந்தயம் – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு – எல்லாம் சேர்த்து ½ கப்
பூண்டு – 4 பற்கள்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் – தலா ½ டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொடுக்கப்பட்டுள்ள தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளிக்கவும். அடுத்து வெந்தயம், பருப்பு வகைகள், மஞ்சள் பொடி, உப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து
200 மி.லி தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்.அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியமான வெந்தய முப்பருப்பு குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“