செம்ம சுவையான வேப்பம் பூ ரசம். செம்ம சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வேப்பம் பூ 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி
எலுமிச்சை அளவு புளி
கருவேப்பிலை
உப்பு
கால் டீஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
கால் டீஸ்பூன் சீரகம்
வத்தல் 4
காயப் பொடி
எண்ணெய்
செய்முறை: வேப்பம் பூவை நன்றாக வறுத்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடியை சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வத்தல், காயப் பொடி சேர்த்து தாளித்து இதில் கொட்டவும். தொடர்ந்து இதில் வேப்பம் பூ சேர்த்து கொதிக்க வைக்கவும்.