vermicelli desserts recipes you should try : விழாக்காலங்களுக்கு சிறப்பே இனிப்பு வகைகள்தான். அதேபோல பாயாசத்திற்கும் தனி சிறப்பு இருக்கின்றது. பாயாசம் வெவ்வேறு உணவு பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதிலும் சேமியா கொண்டு செய்யப்படும் பாயாசம் பலருக்கும் மிகவும் பிடிக்கும். சேமியாவை பாலில் கொதிக்க வைத்து, சர்க்கரை, ஏலக்காய், ட்ரை ஃப்ரூட்ஸ், பாதாம் மற்றும் திராட்சை சேர்த்து தரமானதும் சுவையானதுமான பாயாசம் செய்யலாம். அதே போல சேமியா கொண்டு தயாரிக்கப்படும் ஏனைய டெசர்ட் ரெசிபிகளை காண்க,
கிமாமி சேமியா:
பாலில் சேமியாவை நன்கு வேக வைத்து, அதில் சர்க்கரை, தாமரை விதைகள், பாதாம், தேங்காய், முந்திரி, கோயா, திராட்சை மற்றும் ஏலகாய் சேர்த்து செய்யப்படுகிறது. இதை பரிமாறும் போது ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். ரமலான் பண்டிகையின் போது இந்த இனிப்பு பாயாசம் தயார் செய்யப்படுவது அதன் சிறப்பம்சமாகும்.
சேமியா பர்ஃபி:
பர்ஃபி தயாரிப்பதற்கு சேமியா, சர்க்கரை, பால் மற்றும் கோயா ஆகியன தேவை. இவற்றை சேர்த்து தயாரித்தவுடன் அதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து கொள்ளலாம். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
ஆரஞ்சு கினோவா சேமியா:
இது ஆரஞ்சு சாறு சேர்த்து செய்யப்படுகின்றது. சேமியா மற்றும் கினோவாவை பாதாம் பாலில் வேக வைத்து, அதில் சிறிதளவு ஆரஞ்சு சாறு, நட்ஸ் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படுகின்றது. இதன் ஃப்ளேவரும் நிறமும் எல்லோருக்கும் பிடிக்கும்.
மேலும் படிக்க : உணவுத்தர சான்றிதழ் பெற்ற சென்னையின் முதல் சாலையோரக்கடை – சுந்தரி அக்கா கடை