/indian-express-tamil/media/media_files/2025/03/07/T75M53lH3G4oBb3FyafM.jpg)
ரொம்ப ஈஸியான கிட்சன் டிப்ஸ் தருகிறோம் பாருங்கள். Image Screen grab from YouTube from Nalini Manick Cooking
இவ்வளவு நாள் நீங்கள் வீட்டில் ஒரு வேலையை கடினமாக செய்துகொண்டிருந்திருப்பீர்கள். ஆனால், ஒரு கிட்சன் டிப்ஸ் அதை எளிதாக மாற்றிவிடும். அப்படி, இன்று பூ கட்டுவதற்கு சின்ன உரல் இருந்தால் போதும், உங்கள் வீட்டில் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும்போது துணி வெளுத்துப் போகாமல் இருக்க ஒரு சொட்டு நீலம் போதும் என ரொம்ப ஈஸியான கிட்சன் டிப்ஸ் தருகிறோம் பாருங்கள்.
அன்றாட வாழ்க்கையில் தேவையான, தினசரி உங்கள் கிட்சனில் தேவையான டிப்ஸ்களை நளினி மாணிக் குக்கிங் யூடியூப் சேனலில் கூறியுள்ளதை உங்களுக்காக தொகுத்து தருகிறோம்.
மிக்ஸி ஜாரில் கேஸ் கெட் அறுந்துபோனால், அல்லது தளர்ந்து போனால், கவலையே படவேண்டாம் உங்கள் வீட்டில் ஹேர் பேண்ட் இருந்தால் அதை மூடியில் மாட்டி அரைத்தால் சி்ந்தாமல் சிதறாமல் அரைக்கலாம்.
அதே போல, வீட்டில் முட்டை வேக வைத்த பிறகு, அந்த தண்ணீரை கீழேதான் ஊற்றுவோம். ஆனால், அந்த தண்ணீரைக் கீழே ஊற்றாதீர்கள். அதில் நியுட்ரியன்களும் இருக்கிறது. அதனால், அந்த தண்ணீரை நன்றாக ஆற வைது குளிர்ந்த பிறகு, வீட்டில் உள்ள செடிகளுக்கு ஊற்றிவிடுங்கள். இந்த தண்ணீரை செடிகளுக்கு தொடர்ந்து தெளிக்கும்போது, காய்க்காத செடிகளும் காய்க்கும்.
வீட்டில் சில நேரங்களில் நிறைய உருளைக் கிழங்கு வாங்கி ஸ்டோர் செய்த்திருப்பீர்கள். ஆனால், அந்த உருளைக் கிழங்கு நாளாகும்போது, அதிலிருந்து முளைப்பு வரும், அல்லது அழுகத் தொடங்கும். இதைத் தடுப்பதற்கு, பூண்டு பல்லு பல்லாக உதிர்த்து அதை உருளைக் கிழங்குடன் சேர்த்து ஸ்டோர் செய்து வைத்தால், உருளைக் கிழங்கில் முளைப்பும் வராது. அழுகாமல் நன்றாக இருக்கும்.
வீட்டில் புதிய துணிகள் துவைக்க துவைக்க வெளுத்துப் போகும். இப்படி துவைக்கும்போது துணிகள் வெளுத்துபோகாமல் இருப்பதற்கு, இதைத் தவிர்ப்பதற்கு, டார்க் கலர் துணிகளுக்கு மட்டும் வெளுக்காமல் இருக்க, டார்க் புளூ ஜூன்ஸ், அடர் நிற துணிகளை துவைத்தபின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில், 4 அல்லது 5 சொட்டு நீலம் விட்டு கலக்கி அதில் துவைத்த டார்க் நிற துணிகளை நனைத்து பிழிந்து காய வையுங்கள். துணிகள் வெளுத்துப்போகாமல் இருக்கும்.
பெண்களுக்கு பூ என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர்களுக்கு பூ கட்டத் தெரியாது. வீட்டில் பூஜைக்கு பூ கட்ட வேண்டும் என்றாலும் தெரியாமல் சிரமப்படுவார்கள். அதனால், கடையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். அதனால், பூ கட்டத் தெரியாதவர்களுக்கு எப்படி பூ கட்டுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் சின்ன உரல் இருந்தால் போதும், அதை எடுத்துக்கொள்ளுங்கள். நீளமான நூல் எத்துக்கொள்ளுங்கள். நூலை எடுத்து அதைச் சுற்றி நூல் இரண்டு சம பிரிவாக வரும் விதமாக முடிச்சு போட்டுக்கொள்ளுங்கள். அடுத்து உரலில் முடிச்சு போட்ட இடத்தில் இருந்து நூலில் ஒரு 6 செ.மீ அளவு இடைவெளிவிட்டு முடிச்சு போட்டுக்கொள்ளுங்கள்.
அடுத்து, நீன்கள் எவ்வளவு நீளம் பூ கட்டப் போகிறீர்களா அவ்வளவு நீளம் வீட்டு நூலை முடிச்சுப் போடுங்கள். இப்போது, வீட்டில் உள்ள பூக்களை எடுத்து, அந்த நூலின் இரண்டு பிரிவுகளுக்கு இடையே வைத்து, முடிச்சுக்கு வெளியே இருக்கும் நூலை எடுத்து முன்னால் போட்டு அடிப்பகுதியுடன் சேர்த்து சுற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு பூவாக வைத்து சுற்றினால் ரொம்ப எளிதாக பூ கட்டிவிடலாம். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.