எண்ணெய் வடை, பொரித்த சிக்கன் போன்ற உணவுகளைச் சமைத்த பிறகு, பாத்திரங்களில் பிடிவாதமான கறைகள் படிவது சகஜம். இந்தக் கறைகளைப் போக்கக் கடுமையான முயற்சி தேவைப்படும். எத்தனை டிஷ்வாஷ் சோப்புகளைப் பயன்படுத்தினாலும், கறைகள் பிடிவாதமாகப் போகாத பாத்திரங்கள் உங்களைச் சோதித்திருக்கும்.
Advertisment
ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், பாத்திரங்களை மீண்டும் புதியது போல மின்னச் செய்யலாம்.
சுத்தம் செய்யும் முறை:
Advertisment
Advertisements
ஒரு பெரிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிதளவு காஸ்டிக் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெய் கறை படிந்த பாத்திரத்தை இந்தக் காஸ்டிக் சோடா கலந்த தண்ணீரில் முழுவதுமாக மூழ்க விடவும். கறையின் அளவைப் பொறுத்து, சிறிது நேரம் (சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை) ஊறவிடவும். அதிகப் பிடிவாதமான கறைகளுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஊறவைக்கலாம்.
நன்கு ஊறியதும், பாத்திரத்தை எடுத்து வழக்கம் போல டிஷ்வாஷ் லிக்விட் மற்றும் ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தித் தேய்த்துக் கழுவவும். காஸ்டிக் சோடா கறைகளை எளிதில் தளர்த்தி விடுவதால், அதிக சிரமமின்றிச் சுத்தம் செய்ய முடியும். இப்போது உங்கள் பாத்திரம் புதிது போல மின்னும்.