ஸ்டாலின் வீட்டிற்கே வந்து சந்தித்தது மறக்க முடியாத தருணம்: நடிகை எம்.என்.ராஜம் ஹோம் டூர்

பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தனது வாழ்க்கைப் பயணம், நடிப்பு அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தனது வாழ்க்கைப் பயணம், நடிப்பு அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Actress MN Rajam

எம்.என்.ராஜம், 1950 மற்றும் 1960-களில் தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 200+ திரைப்படங்களில் நடித்துள்ள இவர், முதன்மைக் கதாபாத்திரம், வில்லி, நகைச்சுவை நடிகை எனப் பல்வேறு வேடங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 'மிஸ் வாவ் தமிழா' என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் நடிகை எம்.என். ராஜம், வாழ்க்கைப் பயணம், நடிப்பு அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக தனது 7-வது வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்து நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் எம்.என். ராஜம். தனது நடிப்புத் திறனையும், வசன உச்சரிப்பையும் தனது ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டார். 1954-ம் ஆண்டு வெளிவந்த ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் எம்.ஆர். ராதாவை உதைக்கும் ஒரு காட்சியில், அவர் பெரிய பிரபலம் என்பதால், முதலில் நடிக்கத் தயங்கினார். ஆனால், இயக்குனர் கிருஷ்ணன்-பஞ்சு வற்புறுத்த, நடிப்பதற்கு சம்மதித்ததாக கூறினார். அப்போது, எம்.ஆர். ராதா, "இந்த தைரியமான நடிப்பு உனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும்" என்று கூறி தன்னை உற்சாகப்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் தமிழ் பேசும் ஒரே நடிகை என்பதால், கருணாநிதி மற்றும் கண்ணதாசன் போன்ற பிரபலமான எழுத்தாளர்களின் வசனங்களை எளிதாகப் பேசும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும் எம்.என்.ராஜம் கூறினார்.

'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'நாடோடி மன்னன்' போன்ற படங்களில் எம்.ஜி. ராமச்சந்திரனுடன் நடித்ததை பெருமையாக கருதுவாதாகவும் நாடகக் குழுவில் இருந்த காலத்திலிருந்தே இணைந்து நடித்ததால், சிவாஜி கணேசனை தனது சகோதரராகவே பார்த்ததாகவும் கூறினார். சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்பு ரஜினிகாந்துடன் 'மாங்குடி மைனர்' என்ற படத்திலும், இளம் வயதில் கமல்ஹாசனுடன் 'அரங்கேற்றம்' என்ற நாடகத்தில் அவரது தாயாராகவும் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நடிகை எஸ்.என். லட்சுமிக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக விஜய் நடித்த ஒரு படத்தில் நடித்துள்ளார்.

கடவுளின் அருளாலும், தனது கணவருடனான நல்லுறவாலும், தனது திருமண வாழ்க்கையில் 60,75,80-வது வருட திருமணங்களை செய்து கொண்டதாகவும் பெருமையாக கூறுகிறார். தனது சினிமா வாழ்க்கையின் பொற்காலம் பற்றி நினைவுகூரும் போது, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால்தான் மிகவும் மதிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த பொற்காலம் மீண்டும் வராது என்றும் அவர் கூறுகிறார். மேலும், தனது திரை வாழ்க்கையில்தான் முழு திருப்தியுடன் இருப்பதாகவும், இனிமேல் நடிக்கும் ஆசை இல்லை என்றும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, அவரது சிறு வயதிலிருந்தே தெரியும் என்றும், அவரை நாடகங்கள், திரைப்படங்களில் பார்த்துள்ளதாகவும் எம்.என். ராஜம் கூறினார். அவர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவரைச் சந்திக்க வேண்டும் என்ற தனது ஆசையை ஒரு செய்தித்தாளில் வெளியிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது வீட்டிற்கே வந்து சந்தித்தது, தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தச் சந்திப்பு தங்கள் குடும்பத்திற்கு ஒரு மகத்தான, அழகான தருணம் என்று அவரது மருமகள் விஜியும் கூறினார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: