விக்கி ப்ர்த்டே! மிகப் பெரிய சர்ப்பிரைஸ் கொடுத்த நயன்தாரா.

இவங்க லவஸ் ரொம்ப ஓவராக தான் போயிட்டு இருக்கு.. ஆனா க்யூட் இருக்கு.

vignesh shivan birthday

vignesh shivan birthday : நயன் தாராவின் நீண்ட கால ஆண் நண்பர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நயன் – விக்கி ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானலும் அது ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ரசிகர்களிடம் ஆல் டைம் ஃபேவரெட் நடிகையாக இருக்கும் நயன்தாரா இப்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

வெளிப்படையாக இருவரும் அறிவிக்கவில்லை என்றாலும் இவர்கள் பதிவிடும் ஃபோட்டோக்கள், ஸ்டேட்டஸ், ட்ரெஸிங் கோட் என ஏகப்பட்ட காரணங்களை வைத்து இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியானது.பொதுவாகவே பிரபல நடிகை காதலிப்பது தெரிந்தால் அதை ரசிகர்கள் பலரும் பலவகையாக விமர்சிப்பார்கள்.

தீவிர ரசிர்கள் என்றால் லைட்டாக பொறாமை கூட படுவார்கள். ஆனால், விக்னேஷ் – நயன் விஷயத்தில் இது எதிர்மறையாக அமைந்துள்ளது. இவர்களின் ஜோடியை பலரும் ரசித்து லைக்ஸ்களை அளித்து குவித்துவிடுகின்றன. ஆனால் எல்லோரும் வைக்கும் ஒரே கோரிக்கை ”தயுவு செய்து இப்படி ஃபோட்டோஸா போட்டு எங்களை வெறுப்பு ஏத்தாதீங்க பாஸ்” என்பது தான். நயன் -விக்கிகு இடையில் இருக்கு கெமிஸ்ட்ரி சினிமா உலகிலும் அதிகம் பேசப்படும் ஒன்று.

விக்னேஷ் இயக்கும் படத்தை நயன் தயாரிப்பதும், நயன் நடிக்கும் படத்தின் கதையை விக்னேஷ் முன்னவே கேட்பது என்ன இவங்க லவஸ் ரொம்ப ஓவராக தான் போயிட்டு இருக்கு.. ஆனா க்யூட் இருக்கு. இப்ப இங்கள பத்தி வந்து இருக்க லேட்டஸ்ட் நியூஸ் பார்த்தா இரண்டு பேரும் கூடிய விரையில் திருமணம் செய்துக் கொள்ள போகிறார்களாம்! அதுமட்டுமில்லை 2 நாட்களுக்கு முன்பு விக்கி தயாரிக்கும் நெற்றிக்கண் படம் குறித்த அறிவிப்பும் வெளியானது.

இதுதான் நயன் விக்கிக்கு அவரின் பிறந்த நாள் பரிசாக கொடுத்திருக்கும் சர்ப்பிரஸை. இன்று விக்கிக்கு பிறந்த நாள், அவரின் பிறந்த நாளை மிகப் பெரிய அளவில் கொண்டாட முடிவு எடுத்திருந்த நயன் நேற்று இரவு கலர்ஃபுல் பார்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சிவப்பு பூக்கள் அலங்காரத்தில், நயந்விக்கி இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கேக் கட் செய்தார்கள். இந்த்ஜ பர்த்டே பார்ட்டில் இருவரின் நெருக்கமான சினிமா நண்பர்கள் கலந்துக் கொண்டனர். அந்த ஃபோட்டோஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக.

இந்த பர்த்டே பார்ட்டி புகைப்படங்கள் காலை முதல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் விக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரே லவஸ் தான் என்று விக்கி-நயன் மீது சிலருக்கு பொறாமைகளும் அதிகம் தான். (நயன் வெறியர்கள் உட்பட)

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vignesh shivan birthday vignesh shivan birthday celebration vignesh shivan nayan birthday party images vicky nayan nayanthara vignesh shivan birthday surprise

Next Story
சந்தேகமே வேண்டாம்! இது நம்ம மோடி ஜி தான்.. பிறந்த நாள் ஸ்பெஷல் கேலரி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com