New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Nayanthara-4.jpg)
விக்னேஷ் சிவன், நயன்தாரா
விக்னேஷ் சிவன், நயன்தாரா
கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார். நயன்தாரா, சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியா உயர்ந்தார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது காதலிக்க ஆரம்பித்தனர். கடந்த ஜூன் மாதம்’ மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், நயன்தாரா - விக்ஷேன் சிவன் நடந்தது.
இதில் ரஜினிகாந்த், ஷாருக் கான், விஜய் சேதுபதி, சரத்குமார் மற்றும் இயக்குநர்கள் மணி ரத்னம், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றனர். அதன்பிறகு நயன்தாரா படப்பிடிப்பிலும், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்தினர்.
இந்நிலையில், இப்போது இருவரும் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு’ ஸ்பெயினுக்குச் சென்றனர்.
அங்கு பார்சிலோனா நகரில் இருவரும் தேனிலவு கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். இந்திய சுதந்திர தினத்தையும் இருவரும் அங்கேயே கொண்டாடினர்.
அந்தபுகைப்படங்கள் இதோ!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.