நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கள்ளாக்குறிச்சி விஷச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தையும், சிகிச்சை பெற்று வரும் மக்களையும் விஜய் 20ம் தேதி நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தனது பிறந்தநாளை தனது ரசிகள் கொண்டாட வேண்டாம் என்றும் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்திற்கு நேரடியாக சென்று உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ” காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள,எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தி கோட் படப்பிடிப்பு தள க்ளிக்கை பகிர்ந்து நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை நடிகர் பிரபுதேவா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
” தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேண்டாமா? நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம். இது கோட் பிறந்த நாள் ஷாட்ஸ் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
தி கோட் படத்தின் இரண்டாவது பாடலான ” சின்ன சின்ன கண்கள்” பாடலின் ப்ரோமோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், அவரது எக்ஸ் தளத்தில் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயகுமார் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“