scorecardresearch

குமணன்சாவடியில் இருந்து ஒரு தீபிகா படுகோனே..  வேற லெவலில் மாஸ் காட்டிய பிரபல விஜய் டிவி நடிகை!

பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார்.

Pavithra Janani
Vijay TV actress Pavithra Janani modern outfit photo went viral

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.

இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.

விஜய் டிவியில் தினமும் மதியம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில், அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது. இதில் வெற்றியாக நடிக்கும் வினோத் பாபு, சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். அந்தளவுக்கு நடிக்கிறாரா? இல்லை வாழ்கிறாரா என தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக வினோத் நடிப்பு இருக்கிறது. பவித்ராவும் அதே போலத்தான்..

குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். மேலும் இரவு’ ப்ரைம் டைமில் போடுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனி’ சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த படம் செம வைரலாகி வருகிறது. அதில் கருப்பு நிற ஜீன்ஸ் ஷார்ட்ஸ், ஃபுல் ஹேண்ட் டிஷர்ட் உடன், ஒய்யாரமாக பவித்ரா போஸ் கொடுத்துள்ளார்.

இதுவரை புடவை, சுடிதார் என ஹோம்லி லுக்கில் மட்டுமே பவித்ராவை பார்த்த ரசிகர்கள், அவரது இந்த படத்துக்கு லைக்ஸை தெறிக்கவிடுகின்றனர். குமனன்சாவடியில் இருந்து ஒரு தீபிகா படுகோனே, கியூட்டி, டாலி, பார்பி கேர்ள் என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த போட்டோ!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv actress pavithra janani modern outfit photo went viral