scorecardresearch

இவங்க விஜய் டிவி ஹீரோயினா; இல்ல ஹாலிவுட் ஹீரோயினா.. கோட், சூட்ல அசத்தலா இருக்காங்களே!

பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார்.

Pavithra Janani
Vijay TV Actress Pavithra Janani Stunning looks in her recent photoshoot

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.

இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.

விஜய் டிவியில் தினமும் மதியம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில், அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது. இதில் வெற்றியாக நடிக்கும் வினோத் பாபு, சினிமாவில் ஹீரோவாக நடிக்கலாம். அந்தளவுக்கு நடிக்கிறாரா? இல்லை வாழ்கிறாரா என தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக வினோத் நடிப்பு இருக்கிறது. பவித்ராவும் அதே போலத்தான்..

குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். மேலும் இரவு’ ப்ரைம் டைமில் போடுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனி’ சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த படம் செம வைரலாகி வருகிறது.

சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடந்தது. இதில் பவித்ரா ஜனனிக்கு, சிறந்த பெர்மாருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக, பவித்ரா, அக்வா ப்ளூ கலர் வெஸ்டர்ன் காஸ்ட்யூமில் உடையணிந்து பார்க்க அழகாக இருந்தார். உள்ளே ஒரு வொர்க் செய்த கிராப் டாப் அணிந்து, அதுக்கு ஏடுப்பாக வெளியே சில எம்பிராய்ட்ரி வேலைகளுடன் கூடிய கோட் அணிந்து’ அதற்கு ஏற்றாற்போல ஃபேண்ட், பர்பிள் நிறத்தில் ஹை கீல்ஸ் ஷூ’ என பார்க்க ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு பவித்ரா இருந்தார்.

விருது வாங்கிய போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து’ தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலுக்கு, ‘சிறந்த பெர்ஃபார்மர்’ கிடைப்பதில் முழுப் பெருமை. என்னை நிலைநிறுத்தி, எனது இலக்குகளைத் துரத்துவதற்கான நம்பிக்கையையும், பொறுப்பையும் இது எனக்கு அளித்துள்ளது என்று விஜய் டிவிக்கும், சீரியல் குழுவுக்கு நன்றியை கூறியுள்ளார். கடைசியாக எனது தூண்களாக இருக்கும் எனது சமூக ஊடக ஆதரவாளர்கள் அனைவருக்கும், எப்போதும் என்னுடன் நின்று நான் என்ன செய்தாலும் அதை மதிக்கும்  அனைவரின் அன்புக்கும் நன்றி என பவித்ரா, இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார். இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த புகைப்படங்களை லைக் செய்துள்ளனர். பவித்ரா பதிவுக்கு சினிமா பிஆர்ஓ நிகில் முருகன், தமிழ் ரித்தியா, டிடி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv actress pavithra janani stunning looks in her recent photoshoot