vijay tv alya manasa : சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் நடிகை ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியலில் நாயகியாக கலக்கி இப்போது எங்கேயோ சென்று விட்டார். அறிமுகமான சீரியலிலே சஞ்சீவை காதலித்து கடைசியில் அவரையே திருமணமும் செய்துக் கொண்டார்.
Advertisment
சமூகவலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட மவுசு. ராஜா ராணி சீரியலோட `ஹிட்’டுக்கு முக்கியக் காரணம் இவங்களோட ஜோடிப் பொருத்தம்தான். சீரியல்ல சேர்ந்து நடிச்சதால, நிஜத்துல இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடீச்சி. சமீபத்தில் நடைப்பெற்ற இவர்களது திருமணம் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் படு வைரல். வந்தாரை வாழவைக்கும் விஜய் தொலைக்காட்சி ஆல்யா மானசாவிற்கு திருமணமே செய்து விட்டது என்ற கேலியும் நெட்டிசன்களால் பரபரப்பட்டது.
இன்றைய சீரியல் ஸ்பெஷலாக ஆல்யா மானசா பற்றிய சுவாரசிய தகவல்களை பார்க்கலாம் வாங்க.
Advertisment
Advertisements
1. புரப்போஸ்:
`ராஜா ராணி’ தொடரில் கமிட் ஆகும் முன்பே சஞ்சீவை டான்ஸ் ஸ்கூல் ஒன்றில் சந்தித்திருக்கிறார் மானசா. அதுமட்டுமில்லை ஆல்யாதான் முதலில் சஞ்சீவிடம் காதல் புரப்போஸ் செய்தவர் . சஞ்சீவ் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இந்த ஜோடி காதலில் சேர்வதற்குள்ளே கல்யாணம் ஏற்கனவே முடிந்து விட்டதாக நெட்டிசன்கள் தினம் தினம் புது வதந்தியை பரப்பி வந்தார்கள்.
2. நிச்சயதார்த்தம்:
இவர்களின் நிச்சயதார்த்தம் ஒருவித சுவாரசியமான தருணம் தான். விஜய் டிவியின் `விஜய் டெலி அவார்ட்ஸ்’ சின்னத்திரை விருது வழங்கும் விழாவில் ஆல்யா-சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இருவரும் மோதிரம், மாலை மாற்றி தங்களது திருமணம் குறித்து முறைப்படி அறிவித்திருக்கிறார்கள்.
3. டப்ஸ்மாஷ்:
மானசாவை இன்ஸ்டாகிராமில் பலர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். தற்போது அவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர.
4. பிரேக் அப்:
சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பிப்பாரப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போதே மானஸா, மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். ஆனால், இவர் சீரியலில் நடிப்பது இவரது காதலருக்கு பிடிக்காது என்பதால் இவர்கள் இருவருக்கும் சண்டை கூட வருமாம். மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில மாதங்கள் கழித்து ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் சுபிக்ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது மானசாவிற்கும் திருமணம் ஆகி விட்டது.