vijay tv anchor aishwarya prabhakar aishwarya prabhakar instagram
vijay tv anchor aishwarya prabhakar aishwarya prabhakar instagram : சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமாகி பின்னர் சன் டிவியின் சன் குடும்ப விருது விழா நிகழ்ச்சி மூலம் ஆங்கரானவர் ஐஸ்வர்யா. ஆங்கரில் ஒரு கலக்கு கலக்கிய ஐஸ்வர்யா பிரபாகரன் நன்கு நடனம் ஆட தெரிந்தவர். பின்பு விஜய் டிவியின் நம்பர் ஓன் டான்ஸ் ஷோவான ஜோடி. நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.
Advertisment
முதலில் ஐஸ்வர்யா, விஜய் டிவி லொள்ளு சபா புகழ் ஜீவா உடன் தான் நடன நிகழ்ச்சிக்கு வந்தார். அதன் பின்பு, திடீரென்று ஜீவா நிகழ்ச்சியில் இருந்து விலக, ஐஸ்வர்யா தனக்கு நடன ஜோடியாக சிவகார்த்திகேயனை அழைத்து வந்து மேடை ஏறினார். அப்போது தான் சிவகார்த்திகேயன் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டு பீக்கில் இருந்த நேரம்.
இருவரும் நடனத்தில் கலக்கினர். நிகழ்ச்சிக்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி போட்டியாளர்கள் அனைவரும் இவர்களை மனதார பாராட்டினர். அதனைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.திருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குண்டான புகைப்படத்தையும் பின்பு அவர் படு ஒல்லியாக மாறிய புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பெண்களின் உடல் தோற்றம் திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்பு மாறுவது சகஜமான ஒன்று. அப்படி குண்டான உடலை தீவிட உடற்பயிற்சி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து அனைவரையும் ஐஸ்வர்யா ஆச்சர்யப்பட வைத்தார். இப்போது வெளிநாட்டில் நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.
இவரின் இந்த பதிவு கண்டிப்பாக திருமணம் ஆன பெண்களுக்கு ஒரு நம்பிக்கையை தர கூடியதது தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil