நோயெதிர்ப்பு சக்தி பெற 5 எளிய வழிமுறைகள் – விஜே ரம்யா ஃபிட்னெஸ் டிப்ஸ்!

Vijay Tv Anchor VJ Ramya Fitness Tips Tamil News நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கைமுறைதான் நோயெதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கிறது.

Vijay Tv Anchor VJ Ramya Fitness Tips Tamil News
Vijay Tv Anchor VJ Ramya Fitness Tips Tamil News

Vijay Tv Anchor VJ Ramya Fitness Tips Tamil News : இந்த கொரோனா காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் நோயெதிர்ப்பு சக்தியை பற்றிய பேச்சுகளைதான் அதிகம் கேட்க முடிகிறது. அந்த வகையில், சமீபத்தில் நோயெதிர்ப்பு சக்தியின் வகைகள் மற்றும் அதனை எப்படி பெறலாம் என்பதைப் பற்றிய காணொளி ஒன்றை பதிவேற்றினார் விஜே ரம்யா.

“நோயெதிர்ப்பு சக்தியை இன்னேட் நோயெதிர்ப்பு சக்தி (Innate Immunity), அக்வயர்ட் நோயெதிர்ப்பு சக்தி (Acquired Immunity) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இன்னேட் நோயெதிர்ப்பு சக்தியை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அது தாய்ப்பால் மூலமாக நமக்கு கிடைப்பது. தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்து, அவர்களுடைய தாய்ப்பாலில் நோயெதிர்ப்பு சக்தி இருந்தால், அது குழந்தைக்கு தானாகவே கிடைக்கும்.

அக்வயர்ட் நோயெதிர்ப்பு சக்தி முழுமையாக நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பது. நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கைமுறைதான் அதனை தீர்மானிக்கிறது. இதனை ஐந்து வழிமுறைகள் மூலம் நாம் எளிதாக பெறலாம்.

திடமான உணவுகள் – நாம் உட்கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அதில், ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட வைட்டமின் C நிறைந்திருக்கும் உணவு வகைகள் உட்கொள்வது மிகவும் அவசியம். இஞ்சி, பூண்டு, க்ரீன் டீ உள்ளிட்டவற்றையும் அதிக அளவில் உட்கொள்ளலாம். அதேபோல நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் தயிர், பால் போன்றவற்றை தினமும் உட்கொள்ளலாம்.

திரவ உணவுகள் – எந்த அளவிற்கு திடமான உணவுகளை உட்கொள்கிறோமோ அதே அளவிற்கு திரவ பொருள்களை உட்கொள்வதும் அவசியம். அந்த வரிசையில் ஜூஸ் நல்லதுதான். ஆனால், அதில் அதிகப்படியான சர்க்கரை சேர்ந்துவிடும் மற்றும் நார்ச்சத்துக்கள் அழிந்துவிடும். ஆனால், காய்கறி ஜூஸ் உட்கொள்வது மிகவும் நல்லது. இவை எல்லாவற்றையும் விட போதுமான அளவு தண்ணீர் குடித்தால், அதுவே போதுமானது.

போதுமான அளவு உறக்கம் – எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், சரியான தூக்கம் மிகவும் அவசியம். நிச்சயம் 8 மணிநேரம் தூக்கம் அவசியம்.

பெலென்ஸடு டயட் – நாம் உண்ணும் உணவில் நியூட்ரியன்ட்ஸ், ஃபைபர், வைட்டமின்ஸ், மினரல்ஸ் என எல்லாமே சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பது அவசியம். அதேபோல ப்ராஸஸ்டு மற்றும் ஜங்க் உணவு வகைகள் தவிர்ப்பதும் சிறந்தது.

உடற்பயிற்சி – உடற்பயிற்சி என்றால் உடலை வருத்திக்கொண்டு ஒர்க் அவுட் செய்யவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. வீட்டு வேலைகள் செய்பவர்களுக்கு அதுவே போதுமானது. அப்படி இல்லையென்றால், நடைப்பயிற்சி போன்ற சாதாரண உடற்பயிற்சிகளை செய்யலாம். எல்லாவற்றையும்விட மனஉளைச்சல் இல்லாமல் அமைதியான மனநிலை வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv anchor vj ramya fitness tips tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express