Vijay Tv Arandhangi Nisha Viral Youtube Video Tamil News : கருப்பு ரோஜா என்கிற பெயரில் தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் வைத்திருக்கும் அறந்தாங்கி நிஷா, அதில் ஏராளமான காமெடி காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார். பெரும்பாலும் Vlog வகை கன்டென்ட்டுகளாக இருக்கும் இவருடைய சேனலில், தன் குடும்பத்தினரையும் இணைத்துக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில், சமீபத்தில் புதிய வீட்டில் குடியேறிய நிஷா, அங்குப் பால் காய்ச்சும் நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார். இந்த காணொளி 1 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் 6-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“எப்போதும் ஷூட்டிங்கிற்காக மட்டுமே சென்னை வருவேன். அவர்களே எங்களுக்கு அறைகள் அரேஞ் செய்து கொடுத்து எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும், வெளியே போவது என்றால் முடியாத விஷயமாக இருந்தது. அதனால், வீட்டில் அடம் பிடித்து அழகிய வீடு ஒன்றைப் பார்த்துவிட்டேன். அறந்தாங்கியிலிருந்து எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு அம்மா வந்திருக்கிறார்” என்றுகூறியபடி தன் அம்மா மற்றும் தன்னுடைய மகள் இருவரையும் வரவேற்றார் நிஷா.
வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருள்களையும் அறந்தாங்கியிலிருந்து கொண்டு வந்தனர் அவருடைய குடும்பத்தினர். ஏதோ துணிமணிகள்தான் இருக்கும் என்று நினைத்தால், வீடு கூட்டும் துடைப்பம் முதல் சாப்பிடுவதற்கு இலை வரை எல்லாவற்றையும் ஊரிலிருந்து வாங்கி வந்திருக்கின்றனர்.
அடுத்த நாள் பால் காய்ச்சி, மட்டன், சிக்கன் என தடல்புடலான மினி விருந்தே நடைபெற்றது. பிறகு நிஷாவின் நண்பர்கள் பரிசுகளுடன் வீட்டிற்குள் வர, விருந்து ஆரம்பமானது. ஹெவியான மீல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்க, தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நிஷாவின் உரையாடல், வழக்கம்போல நகைச்சுவையாக இருந்தது. இப்படி வீடியோ முழுவதும் கலகலப்பாக இருந்ததால்தான் என்னவோ கோடி வியூஸ்களை அள்ளி இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil