Advertisment

நடிக்க வராமல் இருந்திருந்தால்... ‘அரண்மனைகிளி’ ஜானு சுவாரஸ்யம்!

மலபார் கிறிஸ்டியன் கல்லூரியில் படிப்பு முடித்தவுடனே மலையாள சீரியலில் ஜானு அறிமுகமானர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Monisha Ashrak, vijay tv aranmanai kili janu

Monisha Ashrak

Aranmanaikili Janu : தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டிப்போட்டுக் கொண்டு சின்னத்திரை தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. அதில் குறிப்பிடத் தகுந்த சேனல் விஜய் டிவி. ரசிகர்களைக் கவரும் வண்ணம் பல்வேறு களங்களை அடிப்படையாக வைத்து, நிறைய சீரியல்கள் இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Advertisment

க்யூட் நஸ்ரியா, கூல் பிந்து மாதவி! : முழு படத்தொகுப்பு

அந்த வகையில், மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘அரண்மனைக் கிளி’. இதில் கதாநாயகியாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் மோனிஷா நடித்து வருகிறார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அக்காவுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாற்றுத்திறனாளி என்பதால், அவள் வீட்டை விட்டு வெளியேறிவிட, குடும்ப மரியாதையைக் காப்பாற்ற, மாற்றுத் திறனாளி அர்ஜூனை மணந்துக் கொள்கிறாள் ஜானு. அர்ஜூனுக்கும் இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லை, காரணம் அவனது தோல்வியடைந்த காதல். மாமியார் மீனாட்சிக்கும் ஜானுவின் மீது பெரிய ஈடுபாடெல்லாம் கிடையாது. ஆனால் அன்பு, பொறுமை, நிதானம் என விவாகரத்து விவகாரத்தை ரத்து செய்யுமளவுக்கு கணவர் மனதில் இடம்பிடித்து விட்டாள் ஜானு. இந்த சீரியல் மூலம் ஜானுவாக நடித்திருக்கும், மோனிஷா ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இவருக்கு ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பல ஆர்மிகளை வைத்திருக்கிறார்கள்.

மோனிஷாவின் சொந்த ஊர் கேரளா. மலபார் கிறிஸ்டியன் கல்லூரியில் படிப்பு முடித்தவுடனே மலையாள சீரியலில் ஜானு அறிமுகமானர். அப்போது அவரின் ரோல் பெயர் ஜனி குட்டி. இதற்கிடையில் மாடலிங்கும் செய்து வந்தார். இவரது கணவர் அர்ஷக் நாத். சீரியலில் அவர் அணியும் அணைத்து ஆடை தேர்வுகளும் அவரின் மாமியார் தான் தேர்ந்தெடுத்து கொடுப்பாராம்.

தனிமை வார்டையும் விட்டுவைக்காத டிக்டாக் மோகம் : கொரோனோ பாதிக்கப்பட்டவரின் சோக வீடியோ

பி.எட் முடித்துள்ள மோனிஷா நடிக்க வராமல் இருந்திருந்தால் ஆசிரியை ஆகியிருப்பாராம். சீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் நல்ல மருமகளென பேரெடுத்த இவருக்கு ட்ராவலிங் என்றால் அத்தனை பிரியமாம். சோர்வாக இருக்கும் போது, ஷாப்பிங் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment