vijay tv aranthangi nisha bigg boss tamil aranthangi nisha
vijay tv aranthangi nisha bigg boss tamil aranthangi nisha : கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் ‘அறந்தாங்கி’ நிஷா. பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியை உடைத்துச் சாதித்திருக்கிறார். பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர்.
Advertisment
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நிஷாவுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. விஷால் நடித்த இரும்புத்திரை, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தனுஷ் நடித்த நடித்த 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.கலக்கப்போவது யாரு சீசன் 5′ நிகழ்ச்சியில் ‘ரன்னர் அப்’ பட்டத்தைக் கைப்பற்றினார். பின்னர், விஜய் டி.வி-யில் பல ரியாலிட்டி ஷோக்களில் நிஷாவின் குரல் ஒலித்தது
கொஞ்ச நாளில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவும்,அவரது கணவர் ரியாஸ் கலந்து கொண்டனர்.தமிழக்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின் போதும் தன்னால் முடிந்த உதவியை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிதான் நிஜாவின் சொந்த ஊர். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். அதன்பிறகு 13 வருடங்கள் பட்டிமன்றப் பேச்சாளராக அறந்தாங்கி மட்டுமல்லாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வேதாரண்யம், பேராவூரணி, பட்டுக்கோட்டை எனச் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்கள், ஆடி மாத விழாக்கள் எனப் பலவற்றிலும் பேசி இருக்கிறார். 13 வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பு தான் கலக்க போவது யாரு.
MBA முடித்துள்ள நிஜாவின் மிகப் பெரிய பலம் அவரின் கணவர், அம்மா, மாமியார் தான். நிஜாவுக்கு பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். முதலில் ஆண் குழந்தைக்கு தாயான அவர், இப்போது பெண் பிள்ளையை பெற்றெடுத்து அடுத்த கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார்.
அதுமட்டுமில்லை கர்ப்பிணியாக இருந்த போதே தொடர்ந்து தனது காமெடி பணிகளையும் செய்து வந்தார். அழகா இருக்குறவ ஜெயிச்சத விட அவமானவப்பட்டவன் ஜெயிச்சது தான் அதிகம் என்ற நிஷாவின் வார்த்தைகள் நூறு சதவீதம் உண்மை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil