விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.
அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.
இப்போது நிஷா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கிறார்.
சீரியல், ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல் என எப்போதும் பிஸியாக இருக்கும் நிஷா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் குடும்பத்துடன் இருக்கும் படங்கள், ஷீட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்
அப்படி நிஷா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் அயித்தையும், மாமனும் சுகம் தானா பாட்டு பின்னணியில் ஒலிக்க நிஷா பாவாடை தாவணியுடன், தோட்டத்தை சுற்றி சுற்றி ஓடுகிறார். அதைப்பார்த்த நெட்டிசன்ஸ் சூப்பர், வெரி நைஸ் என பாராட்டி வருகின்றனர். அதிலும் ஒருவர், யாரு? நம்ம நிஷா அக்காவா? சின்ன பிள்ளையாட்டம் மாறிட்டாங்களே என கமெண்டில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“