சூப்பரான டான்ஸர்…பாக்யாவின் செல்ல மகன் எழில் லைப் ஸ்டோரி

Bakiyalakshmi serial update: ஆன்கராக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டிவி வந்த எழில் தற்போது சின்னத்திரையின் தவிர்க்க முடியாத செல்ல மகன் ஆகி உள்ளார்.

விஜய் டிவியின் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் பாக்கியலட்சுமி. இதில் எழில் என்ற கேரக்டரில் நடித்து வரும் VJ விஷாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அம்மா மீது பாசத்தை பொழியும் மகனாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். இவரது சொந்த ஊர் சென்னைதான். அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ளார். கல்லூரி படிக்கும்போதே மீடியா மீதுள்ள மோகத்தால் ஆன்கரிங் செய்துகொண்டிருந்துள்ளார். வெளிச்சம் டிவியில் “கால் பன்னா காசு” , வேந்தர் டிவியில் “துள்ளுவதோ இளமை” போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவர் ஒரு டான்ஸரும் கூட. ஆன்கராக வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய்டிவிக்கு வந்துள்ளார்.

அதன்பிறகு விஜய் டிவியின் “அது இது எது” மற்றும் “கலக்கல் சாம்பியன்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில் நுழைந்த அவர், கடந்த 2018ல் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் மதன் என்கிற கேரக்டரில் நடித்தார்.தொடர்ந்து விஜய் டிவியின் டான்ஸ் ஷோவில் கலந்துகொண்டார். டான்ஸராக அவருக்கு நல்ல பெயர் கொடுத்தது இந்த ஷோதான். மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய அவர், அரண்மனைக்கிளி என்கிற சீரியலில் ஆகாஷ் என்கிற முக்கிய கேரக்டரில் நடித்தார்.

சீரியலுக்கு அடுத்தபடியாக இதுநாள் வரை என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளர். அப்போது தான் விஷாலுக்கு மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷூட்டிங்கில் இருந்தபோது உடல்நிலை சரியில்லாததால் பாதியில் விலகியுள்ளார். ஒருவருடம் கழித்து மீண்டும் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆடிஷன் அட்டன் செய்து செலக்ட் ஆனவர் நடிக்க தொடங்கினார். இதில் எழில் கேரக்டர் அம்மா மகன் பாசத்தில் காட்டப்பட்டுள்ளதால் அனைவருக்கும் பிடித்துப் போனது. ஒரு குடும்பத்தின் பாரத்தை தாங்கும் அம்மா, அதை கவனிக்காத கணவன், பிள்ளைகள், நானும் உயிருடன் இருக்கும் ஒரு ஆள் தான் என நிலைநிறுத்த போராடும் அம்மாவின் பாச போராட்டம் தான் பாக்கியலட்சுமி சீரியலின் கதை. எட்டு பேர் கொண்ட பாக்கியலட்சுமி குடும்பத்தில் அம்மா பாக்கியலட்சுமியின் செல்ல மகனாக எழில் நடித்துள்ளார்.

டிவி ஷோக்கள், மற்ற சீரியல்களில் கிடைக்காத அங்கீகாரம் அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் கிடைத்துள்ளது. இந்த தொடருக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் எழிலுக்கு ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ், கூடவே கேல் ஃபிரண்ட்ஸ்.. ஒரு தொகுப்பாளராக மட்டுமல்ல ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார் விஷால்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bakiyalakshmi serial actor vj vishal biography

Next Story
ஆன்லைனில் ‘புக்’ செய்யும் பக்தர்களுக்கு இனி அந்த சிரமம் இல்லை: தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com